MEDIA STATEMENTNATIONALSELANGOR

நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு  ஏற்ப, முஸ்லிம்கள் பண்டிகையை மிதமாக கொண்டாடினர்

கோலாலம்பூர், மே 13 – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு  (எஸ்ஓபி)  ஏற்ப, நாட்டின் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இன்று நோன்பு பெருநாளை ஒரு புதிய இயல்பில் கொண்டாடினர்.

ஹரி ராயா அடில் பிட்ரி வழக்கமாக மகிழ்ச்சியான மனநிலையில் கொண்டாடப்படும் ஒரு பெருநாள், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு  ஆணைக்கு ஏற்ப  இந்த ஆண்டு அது வழக்கமான ஆரவாரம், ஊர்வலம் பெருங்கூட்டமின்றி -வீட்டிற்கு வருகை, மசூதிகளில் வழக்கமான சபை பிரார்த்தனைகள் மற்றும் வழக்கமான கல்லறை – தள வருகைகள் கூட ஒரு கட்டுப்பாட்டுடன் செயல் படுத்த பட்டது.

பெர்னாமா இன்று நடத்திய ஒரு சோதனையில், பல முஸ்லிம்கள் தங்கள் பாஜு மெலாயுவில் காலை 7 மணியளவில் தேசிய மசூதி மற்றும் கூட்டரசு மசூதியின் வளாகத்தில் ஒன்றுகூடத் தொடங்கினர், ஆனால் அனைவரும் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படவில்லை,

பினாங்கு யாங் டி பெர்டுவா நெகிரி, துன் அஹ்மத் புஜி அப்துல் மற்றும் அவரது மனைவி தோ பூவான் கதீஜா மொஹமட் நோர் ஆகியோர் மாநில மசூதியில் அடில் பிட்ரி பிரார்த்தனை செய்தனர்.

இதற்கிடையில்,பஹாங் குவாந்தானைச் சுற்றியுள்ள பல மசூதிகளில் கடுமையான உடல் ரீதியான உஷ்ண பரிசோதனை, தூர நெறிமுறைகளும் கடை பிடித்து முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்வதைக் காண முடிந்தது.

சிலாங்கூரில், கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காகவும், பாலஸ்தீனர்களின் பாதுகாப்பிற்காகவும், அன்-நைம் மசூதியில், ஜாலான் கெபுன் ஷா ஆலத்தில் 50 பேர் அடில் பிட்ரி பிரார்த்தனை செய்து குனுத் நசிலாவை ஓதினர்.

சபாவில், பண்டாராயா மசூதி மற்றும் மாநில மசூதியில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு ஏற்பத் தொழுகைகள் நடத்தப்பட்டதாகப் பெர்னாமா கூறுகிறது, அதே நேரத்தில் ஒரு சில கடைக்காரர்கள் மட்டுமே வணிக வளாகங்களில் காணப்பட்டனர்.

 


Pengarang :