HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோயால் இறந்தவர்கள் வாரிசுக்கு வெ.1,000 உதவித் தொகை- விரைந்து விண்ணப்பம் செய்ய கோரிக்கை

ஷா ஆலம், ஜூலை 14- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மாநில அரசு வழங்கும் 1,000 வெள்ளி உதவித் தொகைக்கு வரும் ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவித் தொகையைப் பெற என்ற அகப்பக்கம் வாயிலாக http://www.ssselangorprihatin.com. விண்ணப்பம் செய்யலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தங்களின் நேசத்திற்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களின் துயரத்தில் மாநில அரசும் பங்கு கொள்கிறது. அக்குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 1,000 வெள்ளியை அது வழங்குகிறது. அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்க இந்த உதவி ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியதவி வழங்க சிலாங்கூர் அரசு 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வழி 1,500 குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :