பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி விவகாரம் மீண்டும் ஆட்சிக்குழுவின் கவனத்திற்க கொண்டுச் செல்லப்படும்

ஷா ஆலம், ஆக-3- கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தொடர்பான விவகாரம் இம்மாதம் 8 ஆம் தேதி மீண்டும் மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.

மேல் பரிசீலனைக்காக இவ்விவகாரத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மீண்டும் ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை கூறியது.

கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான நில  அந்தஸ்தை மாற்றம் செய்யும் விவகாரம் மீது பக்கத்தான் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை சந்திப்பு நடத்தினோம்.

இதன் தொடர்பில் முடிவெடுப்பதற்கும் பரிசீலனை செய்வதற்கும் ஏதுவாக இவ்விவகாரத்தை மந்திரி புசார் வரும் 8 ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் ஆட்சிக்குழு கூட்டத்திற்கு கொண்டுச் செல்லவது என முடிவெடுக்கப்பட்டது என அந்த அறிக்கை தெரிவித்தது.

அந்த கூட்டறிக்கையில் கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவரும் மாநில பக்கத்தான் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ, மாநில அமானா கட்சித் தலைவர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், பிஜேடி லிங்க் நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பரிந்துரைக்கு இக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு கிடேக்ஸ் எனப்படும் கின்ராரா-டாமன்சாரா நெடுஞ்சாலைத் திட்டத்தை நிராகரிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.

 


Pengarang :