SELANGOR

84,192 சிலாங்கூர் கூ ஹராப்பான் வீடுகளை நிர்மாணிக்க அங்கீகாரம்

கோல சிலாங்கூர், செப் 11- சிலாங்கூர் மாநிலத்தில் 84,192 சிலாங்கூர் கூ ஹராப்பான் மற்றும் இடாமான் வீடுகளை நிர்மாணிக்க எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்திற்கு மாநில அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக வீடமைப்பு மற்றும் நகர்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

மொத்தம் 49 திட்டங்களின் வாயிலாக இந்த 84,192 வீடுகளும் நிர்மாணிக்கப்படுவதாக கூறிய அவர், வரும் 2023 ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலத்தில் 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் மாநில அரசின் இலக்கை இது தாண்டி விட்டது என்றார்.

மாநில மக்கள் சொந்த வீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் மாநில அரசின் இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என நம்புகிறோம். இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்கள் ஊராசி மன்றங்களுடன் தொடர்பு கொண்டு உரிய அனுமதியுடன் கட்டுமானத் திட்டத்தை விரைந்து மேற்கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் ஆலம் சூரியா சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்கியோரிடம் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :