ECONOMYSELANGOR

புக்கிட் தாபூர், அம்பாங்,   மண்வாரி இயந்திரம் பறிமுதல் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம் (MPAJ) நடவடிக்கை.

ஷா ஆலம், 12 செப்டம்பர்: அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம் (MPAJ) ஒரு நில சமப்படுத்தும் இயந்திரத்தை கைப்பற்றி, லோட் எண் 759 முக்கிம் உலு கிலாங்கில், நகராண்மைக்கழக ஒப்புதல் இன்றி,  நில மேம்பாடு வேலையில் ஈடுப்பட்ட இடத்தில் ஒரு தடுப்பு கல்லை வைத்தது.

அந்த நகராண்மைக்கழக தலைவர் முகமட் ஃபௌஸி முகமட் யடிம் இன்று பிற்பகல் சமூக ஊடகங்களில் பரவிய அனுமதியின்றி நில நடவடிக்கைகள் குறித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹரியன் மெட்ரோ தெரிவித்துள்ளது.

“ஒரு நில சமப்படுத்தும் இயந்திரத்தை கைப்பற்றி, அவ் இடத்திற்குள் கனரக வாகனங்கள் மீண்டும் நுழைவதைத் தடுக்க அந்த இடத்தில் ஒரு தடுப்பு கல்லை வைத்தோம்.

“அம்பாங் நகராண்மைக்கழகம் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது மற்றும் சட்டத்திற்கு இணங்காத எந்த தரப்புடனும் சமரசம் செய்யாது,” என்று அவர் கூறினார்.

மொஹமட் பௌசி, அது,  விவசாய நிலம் , இருப்பினும், ஒரு மறு நடவு மற்றும் இதர பணிக்கான விண்ணப்பம் உள்ளூர் அதிகாரியிடம் (பிபிடி) அனுமதி  பெற வேண்டும் , ஆனால் அப்படி  செய்யவில்லை என்று விளக்கினார்.

“நாங்கள் இந்த விஷயத்தை கவனித்து, இன்று காலை 11 மணியளவில் லோட் எண் 759 இல் அமலாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

“நில உரிமையாளர்கள் நில அகழ்வு மற்றும் மரம் வெட்டும் வேலைகளை நிலம் சமப்படுத்தும் இயந்திரத்தை பயன்படுத்தி செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

முகமது ஃபௌசியின் கூற்றுப்படி, பிரிவு 70 (A), சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 (சட்டம் 133) ஆகியவற்றின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று மாலை,  டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி புக்கிட் தாபூர் பகுதியில் நில நடவடிக்கைகளுக்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அது நகராண்மைக்கழகத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, செயல்பாட்டை நிறுத்த அமலாக்கப் பிரிவு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ட்விட்டர் பயனரின் கேள்வியைத் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டது, நில மேம்பாடு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாதபோது அங்கு மண் எடுப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.


Pengarang :