ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூர் வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தில் 239 பேர் வேலை பெற்றனர்

ஷா ஆலம், நவ 1– கடந்த மாதம் 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஷா ஆலம் மற்றும் கோல சிலாங்கூரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வேலை வாயப்பு  பயணத் திட்டத்தில் 239 பேருக்கு வேலை கிடைத்தது.

மேலும் அந்த நேர்முகச் சந்திப்புகளில் கலந்து கொண்ட 1,108 பேரில் 513 பேர் இரண்டாம கட்ட  நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

வரும் 2022 ஆம் ஆண்டுவாக்கில் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கையை 4.4 விழுக்காட்டிலிருந்து 3.7 விழுக்காடாக குறைப்பதை மாநில அரசு இலக்காக கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தில் யு.எம்.டபள்யு. டோயோட்டா, புரோட்டோன் உள்பட 55 நிறுவனங்கள் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 6 மற்றும் 20 ஆம் தேதிகளில் மேலும் இரு வேலை வாய்ப்பு நிகழ்வுகள் உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங்கில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் இம்மாதம் 27 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் வேலை வாய்ப்பு சந்தையில் 23,000 வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.


Pengarang :