HEALTHMEDIA STATEMENTNATIONAL

2.23 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 1- நாட்டில் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 23 லட்சத்து 61 ஆயிரத்து 734 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்று இந்த எண்ணிக்கை 2 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 481 ஆக இருந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 2 கோடியே 28 லட்சத்து 72 ஆயிரத்து 309 பேர் அல்லது 97.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று பெரியவர்கள் மற்றும் இளையோர் உள்பட 63,489 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 76 ஆயிரத்து 170 ஆக உயந்துள்ளது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 66.4 விழுக்காட்டினர் அல்லது 20 லட்சத்து 91 ஆயிரத்து 464 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும், 26 லட்சத்து 12 ஆயிரத்து 742 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர்.

நேற்று நாடு முழுவதும் 16,244 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் வழி ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 307,653 ஆக அதிகரித்துள்ளது.


Pengarang :