தீயணைப்பு வீரர்களுக்கு ஊக்கத் தடுப்பூசி -வெள்ள அபாயம் உள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை

குவாந்தான், நவ 2- தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதில் வெள்ள அபாயம் உள்ள மாநிலங்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்படும்.

தீயணைப்பு வீரர்களுக்கு குறிப்பாக பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பது முக்கியம் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.

எங்கள் வீரர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ள நிலையிலும் மீட்பு பணியில் ஈடுபட்டும் போது நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இன்னும் உள்ளது. காரணம், பேரிடரில் சிக்கியவர்களின் உடல் நிலை குறித்து நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

பேரிடர் சமயங்களில் வயது மூத்த வீரர்களையும் நாம் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் நோய்த் தாக்கம் குறைந்துள்ள நிலையிலும் அதன் அபாயம் முற்றாக விலகவில்லை. ஆகவே, நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பகாங் மாநிலத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 


Pengarang :