காப்பார் இண்டாவில் வெள்ளத் தடுப்பு

ஷா ஆலம், நவ 30 - கிள்ளான், தாமான் சுங்கை காப்பார் இண்டாவில் மேற்கொள்ளப் படவிருக்கும் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணிகள் அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள திட்டம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக கிள்ளான் நகராண்மைக்கழகம் ஒரு ஆலோசகரை நியமித்துள்ளதாக  அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

இதனிடையே, அப்பகுதியின் பல இடங்களை  தற்காலிகமாக மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக  இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் அவர் கூறினார்.

 அப்பகுதியில் ஏற்படும் திடீர் வெள்ளத்தை சமாளிக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மேரு சட்டமன்ற உறுப்பினர்  முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் கேள்வியெழுப்பிருந்தார். 

நியமிக்கப்பட்ட ஆலோசகர், அந்த பகுதியை வரைபடமாக்கும் பணி தவிர்த்து வெள்ளத்திற்கான சம்பவத்திற்கான காரணத்தையும் கண்டறிவார் என்று இஷாம் கூறினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் தற்போதுள்ள வடிகால் அமைப்பை ஆய்வு செய்து செய்து வெள்ளத் தடுப்புத் திட்டத்தையும் தயாரிப்பார்கள் என்று அவர் சொன்னார்.

Pengarang :