ANTARABANGSAHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவி கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டது

கோலாலம்பூர், டிச 2- கோவிட்-19 ஆண்டிஜென் விரைவு சோதனைக் கருவி (சுயப் பரிசோதனை) நேற்று முதல் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

சந்தையில் கோவிட்-19 சுயப்பரிசோதனை கருவியின் கையிருப்பும் விநியோகமும் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக 2021 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ( கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள்) கீழ் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அக்கருவி கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு நேற்று அமலுக்கு வந்ததாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகர அமைச்சின் அமலாக்க பிரிவு இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.

தற்போது கோவிட்-19 சுயப்பரிசோதனைக் கருவி சந்தையில் போதுமான அளவு உள்ளதோடு அதன் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சு எந்த புகாரையும் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 சுயப்பரிசோதன கருவி தொடர்பான விவகாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி வணிகர்களுக்கு நினைவுறுத்திய அவர், விதிகளை மீறி செயல்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Pengarang :