ஊழலை அனைத்து நிலைகளிலும் உடனடியாக துடைத்தொழிக்க வேண்டும்- அன்வார் வலியுறுத்து

 

 

ஷா ஆலம், ஜன 12-  அனைத்து நிலைகளிலும் புரையோடியுள்ள ஊழல் நடவடிக்கைள் உடனடியாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களையும் காப்பாற்றுவதற்கு இந்த நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் தெரிவித்தார்.

ஊழல் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

அரசியல்வாதிகள் பழையவர்களாக அல்லது புதியவர்களாக இருந்தாலும் ஊழல்வாதிகளுடன் சேர்ந்து விடுகின்றனர். பின்னர் அவர்கள் தங்களின் பண பலத்தையும் பகட்டையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். இதனால் மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த வகையில் தீர்வு ஏற்படப்போவதில்லை என்றார் அவர்.

அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முனைப்பு காட்டும் போக்கு உள்ளது. வெட்டு மரங்களை எடுப்பது யார்? பங்குகளைத் திருடியது யார்? வரம்புக்கு மீறி சொத்துகளை குவித்த து யார்? ஏன் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கின்றனர் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

நாட்டு மக்களை குறிப்பாக சிரமத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை பாதிக்கக்கூடிய குற்றச்செயலாக கருதும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :