சமையல் எண்ணெய் ஏற்றிய லோரி கவிழ்ந்தது- நெடுஞ்சாலையில் 5 கிலோமீட்டருக்கு நெரிசல்

நீலாய், பிப் 19- சமையல் எண்ணெய் ஏற்றிய லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 278.8 கிலோ மீட்டரில் கவிழ்ந்தது. இதனால் பண்டார் அய்ன்ஸ்டேல் முதல் நீலாய் வரை 5 கிலோமீட்டரின் தொலைவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இச்சம்பவம் நேற்று மாலை 6.45 மணியளவில் அந்த நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் நிகழ்ந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஃபஸ்லேய் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இவ்விபத்து காரணமாக அந்த லோரியில் வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அடங்கிய 7 தோம்புகள் விழுநது  அதிலிருந்த எண்ணெய் நெடுஞ்சாலையின் நான்காவது தடம் வரை பரவி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த லோரியின் பின்புற டயர் திடீரென வெடித்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து நெடுஞ்சாலையின் வலப்புறமிருந்து இரண்டாவது தடத்தில் நிகழ்ந்தது. சாலையில் பரவியுள்ள எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு வீர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

காயங்களுக்குள்ளான அந்த லோரியின் ஓட்டுநர் பொதுமக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் அதன் உதவியாளர் காயமின்றி தப்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விபத்து தொடர்பில் 1959 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து ஷரத்துகளின் 10 வது விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்ர தெரிவித்தார்.


Pengarang :