ANTARABANGSA

ரஷியாவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துகிறது உக்ரேன்

இஸ்தான்புல், பிப் 28 – உக்ரேன் ரஷ்யாவை அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐ.சி.ஜே.) முன் நிறுத்தவுள்ளதாக  அந்நாட்டு அதிபர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேன் தனது விண்ணப்பத்தை  ஐ.சி.ஜே. விடம் சமர்ப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இனப்படுகொலை என்ற கருத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டிவிட்டர் பதிவில் கூறினார்.

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு உத்தரவிடுவதற்கான  அவசர முடிவை எடுக்கும்படி  நாங்கள் கோருகிறோம். அடுத்த வாரம் இந்த விசாரணை  தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதிபரின் டிவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை உக்ரேன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்கல் செய்தது  என்று அனைத்துலக நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

உக்ரைனின் விண்ணப்பம் 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை மீதான பிரகடனம்  தொடர்பானது என்று அது மேலும் தெரிவித்தது.


Pengarang :