MEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் கெஅடிலான் தோழமை வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு மந்திரி புசார் !

ஷா ஆலம், மார்ச் 10: ஜோகூர் மாநிலத் தேர்தலில் கெஅடிலான் தோழமை கட்சி பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி களத்தில் இறங்குகிறார்.

சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவக் குழுவின் தலைவரான அவர், மக்கள் கெஅடிலான் மற்றும் பக்காத்தான் ஹராப்பானைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறார், இதனால் ஜோகூரில் அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட அரசாங்கம் அமைய பாடுபடுவோம்.

“மார்ச் 12 அன்று முடிவடையும் ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்ட போராட்டத்திற்கு கெஅடிலான் தோழமை கட்சிகளின் இயந்திரங்கள் ஒன்றாக செயல்பட உதவுவேன்.

“கெஅடிலான் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இணைந்து அக்கறையுள்ள மற்றும் பொறுப்பான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜோகூர் மக்கள் ஆணையிடுவார்கள் என நம்புகிறோம்” என்று அவர் இன்று ஒரு சமூக ஊடகத்தில் கூறினார்.

அவரது பேஸ்புக்கில் பகிரப்பட்ட அட்டவணையின்படி, இந்த வியாழன் மற்றும் வெள்ளி அன்று லார்கின், கெம்பாஸ், திராம், புக்கிட் பத்து, கம்பீர், புக்கிட் நானிங், செமெரா, ரெங்கிட் மற்றும் லாயாங்-லாயாங் உள்ளிட்ட பல மாநிலச் சட்டமன்ற தொகுதிகளில் கட்சி பிரச்சாரத்திற்கு அமிருடின் உதவுவார்.

கடந்த ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் பிரச்சாரத்திற்குக் கெஅடிலான் சிலாங்கூர் உதவியது.

இந்தச் சனிக்கிழமை நடைபெறும்  ஜோகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்..


Pengarang :