இந்த ஜூன் மாதத்தில் 200 ஸ்ரீ கெம்பாங்கன் சந்தை வர்த்தகர்கள் தற்காலிக இடத்திற்கு மாற்றம்

ஷா ஆலம், ஏப்.13: ஸ்ரீ கெம்பாங்கன் சந்தை வர்த்தகர்கள் 200 பேர் இந்த ஜூன் மாதம் முதல் ஜாலான் எஸ்கே 3/2 இல் உள்ள தற்காலிக இடத்துக்குச் செல்லவுள்ளதாக அத்தொகுதி மக்கள் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஜாலான் எஸ்கே 10 இல் தற்போதுள்ள பஜார் 40 ஆண்டுகளுக்கும் மேலானது.  அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லாததால் தற்காலிக இடத்துக்குச் செல்ல வர்த்தகர்கள் அறிவுறுத்தப்பட்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் என்று ஈன் யோங் ஹியன் வா கூறினார்.

“40 ஆண்டுகளுக்கும் மேலான இந்தச் சந்தை சீன, மலாய் மற்றும் இந்திய வணிகர்களின் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

“இதுவரை, பழைய சந்தைக்கும் தற்காலிக சந்தைக்கும் இடையிலான தூரம் நெருக்கமாக இருப்பதால், அவர்கள் நகர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, எனவே வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சுபாங் ஜெயா நகர சபையின் மேயர், அடுத்த ஆண்டு தொடங்கும் பழைய சந்தையின் புனரமைப்பு இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால், வர்த்தகர்கள் 2025 வரை தற்காலிக இடத்தில் இருப்பார்கள் என்றார்.

60 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பழுதுபார்ப்புகளில் போக்குவரத்து விளக்குகள், ஹம்ப்கள் மற்றும் சாலைத் தடைகள் போன்ற பாதசாரிகள் கடக்கும் பல்வேறு வசதிகள் இருக்கும் என்று டத்தோ ஜோஹரி அனுவார் விளக்கினார்


Pengarang :