ANTARABANGSANATIONAL

உலக அரசியலில் இந்தியர்களின் ஆளுமை தொடர்கிறது- பிரிட்டிஷ் பிரதமர் ஆகிறார் ரிஷி சூனாக்

லண்டன், அக் 25– பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து போரிஸ் ஜோன்சன் பின்வாங்கியதைத் தொடர்ந்து உலகின் செல்வாக்குமிக்க அந்நாட்டின் அடுத்த பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சூனாக்கிற்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியத் தலைவர்கள் உயர் பதவி வகிக்கும் மற்றொரு செல்வாக்குமிக்க நாடாக பிரிட்டன் விளங்குகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்மணியான கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணையதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நிதியமைச்சரான 42 வயது ரிஷி சூனாக், இரு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் பொறுப்பேற்கும் மூன்றாவது பிரதமராக விளங்குகிறார். பல ஆண்டுகளாக நிலையற்ற அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிரிட்டனில் சரியான தடத்திற்கு வழி நடத்திச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பினை ரிஷி ஏற்கவிருக்கிறார்.

கோடீஸ்வரரும் முன்னாள் நிதி முதலீட்டு நிறுவன உரிமையாளருமான ரிஷி, பிரிட்டனின் நிதி நிலையை சரி செய்வதற்காக செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து ஒரு மகத்தான நாடு. ஆனால், நாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறோம் என்று பிரதமராக பொறுப்பேற்பதற்கு ஏதுவாக கான்சர்வேடிவ் கட்சிக்கு தலைமையேற்பது தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டில் வாக்களித்தது முதல் பிரிட்டன் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.


Pengarang :