Beberapa Profesor yang hadir menunjukkan deklarasi mereka selepas sidang media Deklarasi Profesor Melayu (G70) di Hotel Armada, Petaling Jaya pada 16 November 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

70 மலாய் பேராசிரியர்கள் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு- பிரதமர் வேட்பாளராக அன்வார் தேர்வு

ஷா ஆலம், நவ 16-  ஜி70 என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட 70 பேரடங்கிய கல்வியாளர்கள் குழு  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தங்களின் ஆதரவை புலப்படுத்தியுள்ளது.

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்குரிய சரியான தேர்வாக அந்த கூட்டணி விளங்குவதாக அக்குழு இன்று வெளியிட்ட மலாய் பேராசிரியர்கள் குழு பிரகடனம் கூறியது.

பிரதமர் பதவிக்கு தகுதியுள்ள தலைவராக ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமை அந்த பேராசிரியர் குழு தேர்ந்தெடுத்துள்ளது.

இஸ்லாத்தை அடிப்படையாக கொண்ட பல்லின சமுதாயத்தை வழிநடத்துவதற்கும் உலக நாடுகள் மத்தியில் நாட்டின் கௌரவத்தை மீட்டெடுப்பதற்கும் தேவையான தகுதியும் ஆற்றலும் உயர் நெறியும் கொண்ட தலைவராக அன்வார் விளங்குகிறார் என்று இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜி70 உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


Pengarang :