ECONOMYSELANGOR

முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வெ.80 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 25- வழிபாட்டு நடவடிக்கைகளை உகந்த சூழலிலும் சமய வகுப்புகளை முழு அடிப்படை வசதிகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு உணர்ந்துள்ளது. 

இந்த நோக்கத்திற்காக மாநில அரசு 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முஸ்லிம்  அல்லாதோர் வழிபாட்டுத தலங்களின் வளர்ச்சிக்கு 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வழிபாட்டுத் தலங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் சமய வகுப்புகளை நடத்துவதற்கு  தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இந்த மானியம் வழங்கப்படுகிறது என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.

லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கு சிறப்பு கூட்டுக் குழுவிடம் விண்ணப்பம் செய்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு இந்த நிதியிலிருந்து மானியம் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.


Pengarang :