ECONOMYSELANGOR

நவம்பர் 24 வரை மாநிலத்தின் நிதி கையிருப்பு 329 கோடி வெள்ளியாக உயர்வு

ஷா ஆலம், நவ 26- இவ்வாண்டு நவம்பர் 24 ஆம் தேதி வரை ஒருங்கிணைக்கப்பட்ட வருமான கணக்கு மற்று அறங்காப்பு கணக்கின் வாயிலாக மொத்தம் 329 கோடி வெள்ளி நிதிக் கையிருப்பை மாநில அரசு கொண்டுள்ளது.

அக்காலக்கட்டத்தில் 26 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி கூடுதல் வருமானத்தை மாநில அரசு பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2018 முதல் 2021 வரையிலான தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கையைப் பார்க்கையில் மாநில அரசு வலுவான நிதி நிலையை கொண்டுள்ளதை அறிய முடியும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உண்டான நிச்சயமற்ற பொருளாதார நிலைக்கு மத்தியில் இந்த அடைவு நிலையை நாம் பதிவு செய்துள்ளோம். என்று மாநில சட்டமன்றத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது  அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் பெறப்பட்ட 228.4 கோடி வெள்ளியில் வரி வசூலிப்பு மூலம் 62.71 கோடி வெள்ளியும் வரியில்லா வருமானம் மூலம் 14.3 கோடி  வெள்ளியும் வருமானம் சாரா தொகையாக 21 கோடியே 98 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றன என்று அவர் சொன்னார்.


Pengarang :