ECONOMYPENDIDIKANSELANGOR

கல்வி, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ-சோசியல் கடனுதவித் திட்டம்- ஹிஜ்ரா அறிமுகம்

ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநில மக்களுக்கு ஐ-சோசியல் எனும் புதிய கடனுதவித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது.

 கல்வி நடவடிக்கைகள், பயிற்சி, வீடு பழுதுபார்ப்பு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரை கடனுதவி பெற முடியும். இந்த நோக்கத்திற்காக 42 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று சட்டமன்றத்தில் இன்று 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.

தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்க 13 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்வது உள்பட பல்வேறு தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ஹிஜ்ரா அடுத்தாண்டில் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரின் அண்டை மாநிலங்களான நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பேராக்கில் வணிகத் தளங்களை வைத்திருப்போருக்கு கடன் உதவி வழங்குவதற்கு ஏதுவாக ஹிஜ்ரா தனது நிபந்தனைகளைத் தளர்த்த உள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :