ECONOMY

தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவ பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

ஷா ஆலம், நவ 26- பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட ஏழ்மை
பாலின ரீதியாகவும் வறுமைக்கான இடைவெளியை அதிகரிக்கச்
செய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 45 விழுக்காட்டு
தனித்து வாழும் தாய்மார்கள் வருமான இழப்பை எதிர்நோக்கியுள்ளதை
கடந்த 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

இப்பிரச்னையைக் களையும் விதமாக தனித்து வாழும் தாய்மார்களுக்கான
பொருளாதார உதவித் திட்டத்திற்கு மாநில அரசு 336,000 வெள்ளியை
ஒதுக்கியுள்ளது. தனித் வாழும் தாய்மார்களின் வருமானத்தைப்
பெருக்குவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் மூலம்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுவதாக
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :