ALAM SEKITAR & CUACASELANGOR

மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 31.65
விழுக்காடு அல்லது 250,250 ஹெக்டர் நிலம் பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதியாக உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டில் மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின்
பரப்பளவு 30.55 விழுக்காடாக மட்டுமே இருந்ததாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வனங்களைப் பாதுகாப்பதில் மாநில அரசு கொண்டுள்ளக் கடப்பாட்டை இந்த
எண்ணிக்கை உயர்வு புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் மாநில அரசு வெளிப்படுத்தியுள்ள
கடப்பாட்டை மெய்ப்பிக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை
நிலைநிறுத்துவதற்கும் அதன் பரப்பளவை அதிகரிப்பதற்கும் தொடர்ந்து
முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மூன்றாவது தேசிய இயற்யியல் திட்டத்தில் (சி.எப்.எஸ்.)
குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் மத்திய வன முதுகெலும்பு மேலாண்மை
திட்டத்தின் சூழியல் வழித்தட ஒருங்கமைப்பு திட்ட அமலாக்கத்தை
மாநில அரசு வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு கடந்த 2021ஆம் ஆண்டு உலு சிலாங்கூரில் உள்ள கோல குபு
பாருவை சி.எப்.எஸ். திட்டத்தில் இணைத்துள்ளது. சிலாங்கூரில் இந்த
சி.எப்.எஸ். திட்டங்களை அமல்படுத்துவதில் இது உத்வேகத்தை தரும்
அம்சமாக விளங்குகிறது என அவர் சொன்னார்.


Pengarang :