ANTARABANGSASUKANKINI

உலகக் கோப்பை காற்பந்து : 2-0 கோல் கணக்கில் ஈரான் வேல்ஸை வீழ்த்தியது

தோஹா, நவ 26; வெள்ளிக்கிழமை பீபா உலகக் கோப்பைக் குரூப் பி ஆட்டத்தில் வேல்ஸுக்கு எதிரான  ஆட்டத்தில் 99வது மற்றும் 100வது நிமிடங்களில் ஈரான் அடித்த இரண்டு கால்களால், 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ்சை   ஈரான் வெற்றி பெற்றது. இப் போட்டி அல் ரய்யானில் நடைபெற்றது.

 

போட்டியின் இறுதியில் ஈரான் ஆட்டத்தின் வேகத்தை இரட்டிப்பாக்கியது. 86ஆவது நிமிடத்தில் வேல்ஸ் கோல் கீப்பர் வெய்ன் ஹென்னெஸ்ஸிக்கு பெனால்டி பாக்ஸிற்கு வெளியே ஈரானிய ஸ்ட்ரைக்கர் மெஹ்தி டரேமியை பவூல்  செய்த்தால் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

 

ஆட்டத்தின் 90 நிமிடங்கள் வரை ஸ்கோர் கோல் ஏதுமின்றி இருந்தது. அதற்கு முன் ஈரான் தனது சக்தி வாய்ந்த ஆட்டக்காரர் ஸ்டாபேஜ் டைமில் ருஸ்பே செஷ்மியை முன் நிறுத்தியது.

 

வேல்ஸ் ,ஆட்டத்தைச் சமநிலைப்படுத்த முயன்ற சமயத்தில், ஒரு நிமிடம் கழித்து மாற்று கோல்கீப்பர் டேனி வார்டை வீழ்த்திய ஈரானிய ரமின் ரெசையனின் ஷாட் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

 

ReplyForward

Pengarang :