ECONOMY

நர்சரி பதிவுக்கான உதவி, M40 குடும்பங்களின் சுமைக் குறைக்கிறது மற்றும் குழந்தைப் பருவ கல்வியை ஊக்குவிக்கிறது

ஷா ஆலம், நவம்பர் 29: சிலாங்கூரில் உள்ள நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களில் (M40) நான்கு வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளை நர்சரியில் பதிவு செய்ய ஒரு முறை RM100 வழங்குவது இத்தரப்பினரின் சுமையைக் குறைக்க உதவுகிறது.

28 வயதான அக்கிலா சாஹிரா சுல்ஹிஷாம், தனியார் நர்சரியில் படிக்கும் தனது மூத்த மகன் அமீர் முக்மினின் முகமது அட்லிக்கு (4) சிலாங்கூர் பட்ஜெட் 2023 மூலம் வழங்கப்பட இருக்கும் ஊக்கத்தொகை RM100க்காகக் காத்துக்கொண்டு இருப்பதாகக் கூறினார்.

“இது ஒரு நல்ல திட்டம், ஏனென்றால் ஓரளவு இது குடும்பத்தின் சுமையை குறைக்கும் காரணம் என் குடும்ப வருமானம் மருத்துவ மையத்தில் பணிபுரியும் என் கணவரை மட்டுமே சார்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

“தினக் குழந்தை பராமரிப்பு செலவு மிகவும் விலை உயர்ந்தது என்று குறிப்பிட தேவையில்லை, எனவே இந்த வகையான உதவி உண்மையில் பயனுள்ளதாக அமைகிறது. இந்தத் திட்டம் பெற்றோர்களிடம் குழந்தைகள் ஆரம்பக் கல்வி அம்சத்தை வலியுறுத்த ஊக்குவிக்கிறது,” என்று அவர் சிலாங்கோர்கினியைச் சந்தித்தபோது தெரிவித்தார்.

இதற்கிடையில், 46 வயதான ரிட்சுவன் காமிஸ், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரி பள்ளிக்கு அனுப்புவதற்கு பணம்தான் ஒரு முட்டுக் கட்டையாக இருக்கிறது எனக் கூறினார். அதனால், இப்பிரச்சினைகளால் இன்னும் போராடி வரும் பெற்றோர்களைக் கருத்தில் கொண்டு இந்த உதவியை சரியான நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது என அவர் விவரித்தார்.

.“இப்போது எல்லாம் விலை உயர்ந்துவிட்டது அதாவது உணவு மட்டுமல்ல குழந்தைகளின் கல்விக் கட்டணம் தான் இது அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது; குறிப்பாக நடுத்தர வருமானம் உள்ள பெற்றோர்கள் அதிகமாக பாதிக்கிறது. நிறைய குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு RM100 உதவி போதுமானது. நிச்சயமாக பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு சிறந்ததையே விரும்புகிறோம்.

“பல்வேறு அம்சங்களில் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநில அரசின் உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன். இதுபோன்ற உதவிகள் தொடரும் என்று நம்புகிறேன்,” என்று சுங்க அதிகாரியாக பணியாற்றிய அவர் கூறினார்

பொறியாளர் அமர் அரிபின் கானின் (39), கருத்துப்படி RM100 உதவியானது, அடுத்த ஆண்டு நர்சரி பள்ளியில் பதிவு செய்யவிருக்கும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

“இது ஒரு நல்ல அணுகுமுறை மற்றும் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த முன் திட்டம் பரவலாக விளம்பரப்படுத்தப்படும் என நம்புகிறேன், ஏனெனில் இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாத சிலர் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

டத்தோ மந்திரி புசார் முன்வைத்த சிலாங்கூர் பட்ஜெட் 2023யில்  நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகளை டேகேர் அல்லது நர்சரியில் சேர்ப்பதற்கு RM100 ஒருமுறை வழங்குவதற்காக RM500,000 யை ஒதுக்கியுள்ளது.

M40 தரப்பினர் கடந்த கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின் ஏற்பட்ட சுமையை உணர்ந்து, அவர்களுக்கு ஆண்டு பதிவு ஊக்கத்தொகை அறிமுகப்படுத்தப்பட்டது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :