ALAM SEKITAR & CUACASELANGOR

பெரும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மழைநீருக்குச்  சுரங்கப்பாதை அமைக்க எலிசபெத் வோங்  வலியுறுத்து   

ஷா ஆலம், நவ 30: சிலாங்கூரில் வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க, மழைநீரைத் திருப்பும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

மாநிலத்திற்கு RM1.4 பில்லியன் இழப்பை ஏற்படுத்திய கடந்த ஆண்டு டிசம்பர் மாதப் பேரிடர் போன்ற ஒரு பேரழிவைத் தவிர்க்கச் சுரங்கப்பாதையின் கட்டுமானம் மிகவும் முக்கியமானது என புக்கிட் லஞ்சன் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) எலிசபெத் வோங் கீட் பிங் கூறினார்.

“இந்நகரத்தில் மற்றும் பிற பகுதிகளில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் சாலை சுரங்கங்கள் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை (ஸ்மார்ட்) போன்ற கட்டுமானப் பணிகளை மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

“தற்போதைய வடிகால் அமைப்பின் கொள்ளளவை மிஞ்சி அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது’’  இதனால் நீர் கரை புரண்டு ஓடுகிறது. என இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அமர்வில் 2023 பட்ஜெட் பற்றி விவாதம் செய்யும் போது கூறினார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று டத்தோ மந்திரி புசார் இங்கு கட்ட விரும்பும் ஸ்மார்ட் தொடர்பான திறன் மற்றும் சூத்திரத்தைப் பற்றி மாநில அரசு மட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கூற்றுப்படி, கட்டமைப்பு எஸ்கோ ஐ ஆர் ஹிஷாம் அசிம் ஒட்டுமொத்தச் செயல்முறைகளையும் எளிதாக்குவதற்கு அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறார் என்றார்.


Pengarang :