ECONOMY

கிளானா ஜெயா எல்.ஆர்.டி. சேவை நேற்றிரவு வழக்க நிலைக்குத் திரும்பியது

கோலாலம்பூர், நவ 30– தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட
கிளானா ஜெயா தடத்திற்கான இலகு இரயில் (எல்.ஆர்.டி.) சேவை
நேற்றிரவு 10.00 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
மின்னல் தாக்குதலால் சேதமடைந்த அந்த இரயில் சாதனங்கள் சரி
செய்யப்பட்டு விட்டதாக அந்த இரயில் சேவையை மேற்கொண்டு வரும்
ரெப்பிட்ட ரெயில் சென். பெர்ஹாட் நிறுவனம் நேற்றிரவு வெளியிட்ட
அறிக்கையில் தெரிவித்தது.

நேற்றிரவு 10.00 மணி தொடங்கி கெரிஞ்சி நிலையத்திலிருந்து
மேற்கொள்ளப்படும் இரு தடங்களுக்குமான சேவை வழக்க நிலைக்கு
திரும்பியுள்ளதாக அது கூறியது.

அந்த தடத்தில் இரயில் சேவையின் செயல்பாட்டைப் பொறியியலாளர்கள்
தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பயணிகளுக்கு ஏற்பட்ட
அசௌகர்யங்களுக்காக ரெப்பிட் ரெயில் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

கெரிஞ்சி எல்.ஆர்.டி. நிலையத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கியதைத்
தொடர்ந்து பி.ஐ.இ.எஸ். எனப்படும் அவசர நிறுத்த பாதுகாப்பு முறையில்
பழுது ஏற்பட்டது. இதனால் கிளானா ஜெயா தடத்தில் இரயில் சேவை
பாதிக்கப்பட்டது.

இந்த பாதிப்பின் காரணமாக அந்த தடத்தில் அனைத்து இரயில்களும்
தானியங்கி முறையில் அல்லாமல் மனித ஆற்றலைக் கொண்டு
இயக்கப்பட்டன. இதனால் பயணச் சேவையில் தாமதம் ஏற்பட்டது.


Pengarang :