ECONOMY

விளையாட்டுத்துறைக்கு  RM7 மில்லியன் நிதி, திறமையான, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிய

கிள்ளான், நவ 30; சிலாங்கூரில் விளையாட்டு துறையின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான RM7 மில்லியன் நிதியானது  உலக  தர  திறன் கொண்ட புதிய விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர முடியும்.

பல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சுரேந்திரன் சந்திரசேகரன் (31), வழங்கப்படும் ஊக்கத்தொகை உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்க மாநில அரசுக்கு உதவுவதோடு சர்வதேசப் போட்டிகளில் நாட்டிற்கு புகழ் கிடைக்கவு உதவும் .எனக் கருதுகிறார்.

பயிற்சித் திட்டங்கள், கொடுப்பனவுகள், விளையாட்டு உபகரணங்கள், மற்றும் நிதியுதவி ஆகியவை நிச்சயமாக மாநிலத்தின் விளையாட்டுத் துறைக்கு ஒரு புதிய உணர்வை  கொடுக்கும். இது,  நாம் புதிய விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர முடியும் மேலும் அவை பல்வேறு விளையாட்டு போட்டிகளில் முன்னிலைப் படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

மாநில அரசின் கவனிப்பு, ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுத் துறை வளர்ச்சி அடைய உதவும் என்றார் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், முகமட் சுஹைலி அரிஃபின் (35).

“இந்த திட்டம் மாநில விளையாட்டு அம்சத்திற்கு புத்துயிர் கொடுக்கிறது.   நம்மிடம் நவீன மற்றும் மேம்பட்ட விளையாட்டு உபகரணங்கள் இருந்தால், அது விளையாட்டுத் துறையை இயக்கி, உலக அளவில்  போட்டியிடக்கூடிய அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் சிலாங்கூரை முன்னணி வகிக்க உதவும்,” என்று கூறினார்.

முஹம்மது நூர் ஹிஸ்யாம் ரோஸ்மன் (25), விளையாட்டு உடைமைகளை சரிசெய்தல் மற்றும் உருவாக்குதல் போன்ற திட்டம் மாநில விளையாட்டு துறையை மேம்படுத்த முடியும் என்றார்.

“மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீன விளையாட்டு வசதிகள் மறைமுகமாக விளையாட்டு அணுகலை அதிகரிக்கின்றன மற்றும் இளம் தலைமுறையினர் விளையாட்டு நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுப் படவும் ஊக்குவிக்கின்றன,” எனக் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி 2023ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் சமர்பித்த போது, சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் (MSN) கீழ் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் RM7 மில்லியன் ஒதுக்கீட்டில் தொடரும் என்றார்.

விளையாட்டு துறையை பெருமைப்படுத்த அதற்கான உடைமைகளை மறுசீர் செய்வது மற்றும் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த RM2.24 மில்லியன் தேவைப்படுவதாக கூறினார்.


Pengarang :