சிலாங்கூரில் குறைந்த விலை மற்றும் கிராம வீடுகளுக்கு வீட்டு வரி விலக்கு – கிட்டத்தட்ட RM70 மில்லியன் செலவு

 ஷா ஆலம், டிச 7: சிலாங்கூரில் குறைந்த விலை மற்றும் கிராம வீடுகளுக்கு வீட்டு வரி விலக்கு அடுத்த ஆண்டும் தொடரும், இதில் RM68.74 மில்லியன் செலவாகும்.

வரி விலக்கு என்பது மக்களின் சுமையை குறைக்க மாநில அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் ஒன்றாகும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இது மாநிலத்திற்கு வருவாய் இழப்பு போல் தோன்றினாலும் மாநிலத்தின்  இதர வருமானங்களிலிருந்து பெறுபவை போதுமானதாக உள்ளது” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் தெரிவித்துள்ளார்.

“ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை உடைய பக்காத்தான் ஹராப்பான் இந்த முடிவை எடுக்க உதவியது. அதே நேரத்தில் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் கீழ் செயல்படுத்தப்படும் 42 திட்டங்களுக்கு இன்னும் RM600 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.”

கிராமம் மற்றும் குறைந்த விலை வீடுகளுக்கு வீட்டு வரி விலக்கு 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Pengarang :