ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெள்ளம் முழுமையாக சீரடைந்தது- பகாங்கில் 409 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

ஷா ஆலம், டிச 8- சிலாங்கூரில் வெள்ள நிலைமை சீரடைந்து,
அனைவரும் வீடு திரும்பியதைத் தொடர்ந்து இம்மாநிலத்திலுள்ள
அனைத்து துயர் துடைப்பு மையங்களும் மூடப்பட்டன.

இன்று காலை 8.00 மணி நிலவரப்படி பகாங், பேராக் மற்றும் பெர்லிசில்
128 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் 13 தற்காலிக நிவாரண மையங்களில்
தங்கியுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.
பகாங் மாநிலத்தைப் பொறுத்த வரை ரவுப் மற்றும் லிப்பிசில்
அமைக்கப்பட்டுள்ள 11 துயர் துடைப்பு மையங்களில் 409 பேர்
தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.

பேராக் மற்றும் பெர்சிலிசில் அமைக்கப்பட்டுள்ள தலா ஒரு துயர் துடைப்பு
மையங்களில் 29 பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இன்று மாலை மற்றும் இரவில் தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.


Pengarang :