ANTARABANGSA

ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவான நில நடுக்கம் மேற்கு ஜாவாவை உலுக்கியது

ஜாகர்த்தா, டிச 8- ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவான நில நடுக்கம் மேற்கு
ஜாவாவின் சுக்காபூமி நகரை இன்று உலுக்கியது. இந்த நில நடுக்கம்
உள்நாட்டு நேரப்படி காலை 7.00 மணிக்கு ஏற்பட்டதாக அந்நாட்டின் புவி
இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நில நடுக்கும் சுக்காபூமி நகரின் தென்கிழக்கே 22 கிலோ மீட்டர்
தொலைவிலும் 104 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்தது.
பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 92 கிலோமீட்டர் தொலைவிலுள்ள
தென் ஜாகர்த்தாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த பூகம்பத்தின் எதிரொலியாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும்
விடுக்கப்படவில்லை. உயிர் அல்லது பொருட்சேதம் குறித்து இதுவரை
எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.


Pengarang :