SELANGOR

இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை இஸ்தானா புடாயா தியேட்டரில் கிள்ளான் வரலாறு அரங்கேற்றம்

ஷா ஆலம், டிச 8: சிலாங்கூர் நிர்வாகத்தின் முன்னோடி பகுதிகளில் ஒன்றான
கிள்ளானின் வரலாறு இஸ்தானா புடாயாவில் உள்ள அந்தாரா திகா தியேட்டரில் இன்று
இரவு அரங்கேற இருக்கிறது.

கலை மற்றும் கலாச்சார எஸ்கோ போர்ஹான் அமன் ஷா கூறுகையில், சனிக்கிழமை
வரை அதாவது மூன்று நாள்கள் இந்நிகழ்ச்சி நடைபெறும் என்றார். பல்வேறு இனங்கள்
சம்பந்தப்பட்ட சமூகக் கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்கள் காட்டுவதோடு
மட்டுமல்லாமல் அரச நகரமாக முடிசூட்டப்பட்ட இம்மாவட்டத்தின் கதையையும்
உள்ளடங்கும்.

கிள்ளான் வரலாற்றைப் பாராட்டுவதற்காக அரசு ஊழியர்கள், நாடகம், மொழி மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் பார்வையாளர்களாக வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற போர்ஹான் கூறினார்.

இந்த அரங்கேற்றம் அரசு ஊழியர்களிடத்தில் மொழி மற்றும் வரலாற்று அறிவை
மேம்படுத்துவதற்கான முயற்சியே ஆகும் என்று அவர் கூறினார். ஆர்வமுள்ள நபர்கள் https://www.ticket2u.com.my/event/29253 என்ற இணைப்பின்
மூலம் RM20 விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.


Pengarang :