SELANGOR

கோல லங்காட்டில் தடை செய்யப்பட்டப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிபட்டன

ஷா ஆலம், டிச 8- பண்டார் பூங்கா இமாஸ் மற்றும் பெர்மாத்தாங் பாசீர்
ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த மாடுகளுக்கு எதிராக கோல லங்காட்
நகராண்மைக் கழகம் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட
நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில்
மாடுகள் சுற்றித் திரிவதைக் கண்டனர்.

தடை செய்யப்பட்ட இடங்களில் மாடுகளை வைத்திருந்தது அல்லது
வளர்த்தது ஆகிய குற்றங்களுக்காக 1971ஆம் ஆண்டு கோல லங்காட்
நகராண்மைக் கழகத்தின் மாடு எருமை கட்டுப்பாட்டு சட்டத்தின் 4வது
பிரிவின் கீழ் இரு மாடுகள் பிடிபட்டன.

இவ்விவகாரம் தொடர்பான புகார்கள் அல்லது மேல் விபரங்களுக்கு
நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவை 012-3004217 என்ற
வாட்ஸ்ஆப் புலனத்தின் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :