ALAM SEKITAR & CUACA

கிள்ளானில் இன்று முதல் ஞாயிறு வரை கடல் பெருக்கு அபாயம்- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்து

ஷா ஆலம், டிச 8- கோலக் கிள்ளான் பகுதியில் இன்று தொடங்கி வரும்
ஞாயிற்றுக் கிழமை வரை கடல் பெருக்கு ஏற்படும் என்று தேசிய
ஹைட்ரோகாஃபி மையம் எச்சரித்துள்ளது.

கெடா மாநிலத்தின் கோல மூடா, பேராக்கின் பாகான் டத்தோ, ஜோகூர்
மாநிலத்தின் பொந்தியான் மற்றும் பத்து பகாட்டிலும் இதே நிலை நீடிக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலக் கிள்ளான் பகுதியில் இன்று மாலை 5.45 மணிக்கும் நாளை
அதிகாலை 6.17 மணிக்கும் கடல் மட்டம் 4.9 மீட்டர் வரை உயரும் எனவும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கடல் பெருக்கு காரணமாக நீர் பெருக்கெடுத்து கடலோரத்திலுள்ள
தாழ்வானப் பகுதிகளிலும் ஆற்று முகத்துவாரங்களிலும் நுழைவதற்கு
சாத்தியம் உள்ளது.

ஆகவே, பொது மக்கள் இந்த இயற்கைச் சீற்றம் குறித்து எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு
தொடர்பான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளைத் தொடர்பு
கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டில் கடல் பெருக்கு ஏற்படும் நாட்கள் தொடர்பான தகவல்களை
https://hydro.gov/ramalanpasangrurut.my என்ற அகப்பக்கம் வாயிலாக தெரிந்து
கொள்ளலாம்.


Pengarang :