ECONOMY

2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 56 பெட்டிகள் கொண்ட இலகு ரயில் (எல்ஆர்டி) கிளானா ஜெயாவில் இயங்கத் தொடங்கும்.

கோலாலம்பூர், டிச. 8: அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் மொத்தம் 56 பெட்டிகள் கொண்ட இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி)  கிளானா  ஜெயா   அதிகரிக்கப் படும். பொதுமக்கள் அதிகமானோர் பயணம் செய்யும் “உச்ச நேரங்களில்  ‘’  இது  இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

தற்போது, 38 பெட்டிகள் கொண்ட எல்ஆர்டி ரயில்கள் மட்டுமே பிக் ஹவர்ஸில் ஐந்து நிமிட   இடைவெளியில்  சேவை வழங்கி வருகின்றன. “அவை மூன்று நிமிட இடைவெளிகளாக குறைக்க, 48 பெட்டிகள் இயக்கப்படும் ரயில்கள் தேவை. பராமரிப்பு பணியை விரைவுபடுத்துமாறு பிரசரணா மலேசியாவை கேட்டுள்ளேன் என்றார்

“இந்த குறுகியக் கால கட்டத்தில் பயண நேரத்தை மூன்று நிமிடங்களாகக் குறைக்க நாங்கள் உறுதியளிக்க முடியாது, நாங்கள் இன்னும் ஐந்து நிமிட சேவையை வழங்குகிறோம், ஆனால் ஐந்து நிமிடங்கள் நிலையானது என்று அர்த்தமல்ல, கூடுதல் பெட்டிகள் இருந்தால், அதை விரைவுபடுத்துவோம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

அதே வழித்தடத்திற்கு 19 புதிய ரயில் பெட்டிகளையும் பிரசராணா வாங்கியுள்ளதாகவும், சிறந்த மற்றும் வசதியான சேவைகளை உறுதி செய்வதற்காக முதல் யூனிட் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் செயல்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :