ALAM SEKITAR & CUACA

எம்பிஎஸ்ஏ (MBSA) அதிக மறுசுழற்சி மையங்களை உருவாக்க விரும்புகிறது

ஷா ஆலம், டிச. 9: சுற்றுச்சூழல் மீது அதிகப் பொறுப்புள்ளக் குடிமக்களை உருவாக்க, ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) அதிக மறுசுழற்சி மையங்களைத் திறக்க விரும்புகிறது.

அதன் மேயர் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட் கூறுகையில், இதுவரை 16 மறுசுழற்சி மையங்கள் உள்ளூர் சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை எளிய முறையில் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

“கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, பிரிவு U13 சமூக மறுசுழற்சி மையம் மட்டும் காகிதம், அலுமினியக் கேன்கள், ஆடைகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பானப் பெட்டிகள் உட்பட 223 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரிக்க முடிந்தது.

“இதனால், நாங்கள் மேலும் மறுசுழற்சி மையங்களை திறக்கத் திட்டமிட்டுள்ளோம். கட்டுமானப் பணியில் உள்ள பிரிவு U16யில் புதிதாக ஒரு மையத்தையும், மேலும் இந்த மாவட்டத்தில் திறக்கப்பட்ட ஆரம்ப மையமான செக்‌ஷன் 2யில் உள்ள மறுசுழற்சி மையத்தையும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

நேற்று இங்கு பிரிவு U13யில் உள்ள புதிய மறுசுழற்சி மையத் திறப்பு விழா மற்றும் 5R கார்னிவல் நிகழ்ச்சியின் போது பேசிய நோர் ஃபுவாட், சமூக மற்றும் பள்ளி மட்டபத்தில் மறுசுழற்சி நடைமுறை மற்றும் சேகரிப்பு திட்டங்களைத் தனது தரப்பு இப்போது தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.

“டோஸ் (DOS) திட்டம் 2019யில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்வழி மறுசுழற்சி நடவடிக்கைக்குச் சமூக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்று அவர் கூறினார்.


Pengarang :