NATIONAL

சிலாங்கூரில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம்

ஷா ஆலம், டிச 9: தாய்லாந்தின் சாரோன் போக்பாண்ட் (CP) உடன் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம், (PKPS) சிலாங்கூர் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்த உறுதி பூண்டுள்ளது.

உலகின் முன்னணி உணவுக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, அடிப்படை உணவு பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபடுவதன் மூலம் நீண்டகால தீர்வுகளை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

சாரோன் போக்பாண்ட் (CP) மலேசியாத் தலைவர் மொன்திரி ஶ்ரீஹமொந்திரி (Montree Srihamontree) மற்றும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத் (PKPS) தலைமை செயல் அதிகாரி டாக்டர் மொஹமட் கைரில் முகமட் ராசி இடையே நேற்று நடந்த கலந்துரையாடலின்  போது கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் தொடர்பான தற்போதையப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

” சாரோன் போக்பாண்ட் மற்றும் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழக இடையில் உள்ள உறவின் மூலம், இந்த நாட்டில், குறிப்பாக சிலாங்கூரில் உள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவுப் பொருட்கள் கிடைப்பதையும் அவற்றின் நிலையான விலையை நிர்ணயிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

மக்கள் நலனுக்காக வணிகத் திட்டங்களைச் செயல்படுத்துவதின் தோட்டத் தொழில் மற்றும் சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிலாங்கூர் மாநில அரிசி கடன் வாரியத்திற்கு பதிலாக ஜனவரி 2, 1972 இல் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்டது.


Pengarang :