NATIONAL

வலுவான அதிகாரத்துடன் ஆட்சி நடத்த நம்பிக்கைத் தீர்மானம் வழி வகுக்கும்-அன்வார்

புத்ராஜெயா, டிச.12- நாடுளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவின் 
அடிப்படையில் வலுவான அதிகாரத்துடன் நாட்டை வழிநடத்த நம்பிக்கைத் தீர்மானம் 
வழிவகுக்க்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுடன் அண்மையில்  தாம் நடத்திய  சந்திப்பின் போது இந்த விஷயம் தெளிவுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

சட்ட ரீதியாக அது தேவையில்லை. தெளிவான பெரும்பான்மை மற்றும் மாமன்னரின் அதிகாரங்களும் தெளிவாக இருப்பதால் நம்பிக்கைத் தீர்மானம் தேவையில்லைச் சட்டத் துறைத் தலைவரும் கூறியுள்ளார் .

சட்டத் துறைத் தலைவரின்  கருத்துக்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட மாமன்னர், பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல்  ஆகியவற்றிடமிருந்து தெளிவான 
ஆதரவு இருப்பதால் பிரதமர் என்ற முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை என்று 
கருதுகிறீர்களா? என்று கேட்டார். 

அதற்கு நான் பதிலளித்தேன். அம்புன் துவாங்கு, இது விதிமுறைகள் மற்றும் 
சட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல, பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தெளிவான அதிகாரத்துடன் நாட்டை வழிநடத்த விரும்புகிறேன். அதை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, முடியவில்லை என்றால், மக்களின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வேன் என அன்வார் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில் உள்ள  ஸ்ரீ பெர்டானாவில் முஸ்லிம் சமயப் போதகர்களுடனான  
நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

சில கட்சிகளால் சில கேள்விகளை எழுப்பினாலும் 15வது பொதுத் தேர்தலுக்குப்  பின் 
ஏற்பட்ட நிச்சயமற்ற நிலையைத் தீர்ப்பதில் மற்ற மலாய் ஆட்சியாளர்களுடன் 
இணைந்து  மாமன்னர் கூட்டரசு அரசியலமைப்பின் படி முக்கியப் பங்கினை 
ஆற்றினார் என்று அவர் சொன்னார்.

ஆட்சியாளர்கள் அவரைச் சந்தித்து, எந்தக் கட்சி அதிக இடங்களைப் பெறுகிறதோ 
அந்த கட்சிக்கு முன்னுரிமை மற்றும் நாட்டை ஆளுவதற்கான ஆணையை வழங்குவதில் தாங்கள் ஆட்சேபனை இல்லை என்று ஆரம்பத்தில் இருந்தே கூறினர்.

மாமன்னர் நிர்ணயித்த மதியம் 2. 00 மணி வரையிலான கால அவகாசத்திற்குள்  
சத்தியப் பிரமாண வாக்குமூலத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் 
மேற்கொள்ளப்பட்டன.

எந்தவொரு பந்தயத்திலும்  முதல் சுற்றில் அவர்  நம்மை முந்தலாம். மூன்றாவது சுற்றில் நாம் அவரை பின்னுக்குத் தள்ளலாம். இதில் முக்கியமானது என்னவென்றால் 
இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான்.

இதற்கு முன்பு சத்திய பிரபாண வாக்குமூலத்தை வழங்கியவர்கள் பிற்பகல் 2.00 
மணிக்குள் திரும்பப் பெற்றதால், நான் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றேன் 
என்று அன்வர் விளக்கினார்.

டிசம்பர் 19 தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள மலேசியாவின் 15வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது அன்வாரின் தலைமைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு முக்கிய நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக இருக்கும்.

Pengarang :