NATIONAL

அடுத்தாண்டில் ஆறு மாநிலங்களில் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பயணம்

அலோர் காஜா, டிச 12- சட்டமன்றத்தை இன்னும் கலைக்காமலிருக்கும்
ஆறு மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அடுத்தாண்டு
தொடக்கம் முதல் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி பிரசாரப் பயணத்
தொடரை மேற்கொள்ளும்.

கடந்த பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட
ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அந்த ஆறு மாநில
மக்களிடையே ஏற்படுத்துவதில் இந்த பயணத் தொடர்
அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது என்று ஹராப்பான்
பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன்
கூறினார்.

அமைச்சின் பணிகளைக் கவனிக்கும் அதேவேளையில் அடுத்த ஆறு
மாதங்களில் நடைபெறவிருக்கும் மாநிலத்தில் தேர்தல் மீதும் கவனம்
செலுத்துவதும் அவசியம் என்பதை அண்மையில் கெஅடிலான் கட்சியின்
துணைத் தலைவர் ரபிஸி ரம்லியுடன் நடத்திய சந்திப்பின் போது
வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.

ஆகவே, இந்த பணி நமது கடமைகளில் ஒன்றாகவும் அதிமுக்கியத்துவம்
வாய்ந்ததாகவும் விளங்குகிறது என்று இங்குள்ள மாச்சாப் பாரு சீன
தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற “நம்பிக்கைத் தொடங்கி ஒருமைப்பாடு
வரை“ எனும் தலைப்பிலான புத்தாண்டு உத்வேக நிகழ்வில் உரையாற்றிய
போது அவர் குறிப்பிட்டார்.

பக்கத்தான் வசமுள்ள சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான்
ஆகிய மாநிலங்களும் பாஸ் கட்சி வசமுள்ள கிளந்தான், திரங்கானு
மற்றும் கெடா ஆகிய மாநிலங்களும் இன்னும் மாநிலத் தேர்தலை
நடத்தவில்லை.


Pengarang :