NATIONAL

விதிமுறைகளைச் சரிபார்க்காமல் உத்தரவுக்குக் கீழ்ப்படியும் போக்கை கைவிடுவீர்- அரசு ஊழியர்களுக்கு அன்வார் நினைவுறுத்து

பெட்டாலிங் ஜெயா, டிச 12- கொள்கைகளை வகுப்பதிலும் அவற்றை
அமல்படுத்துவதிலும் நிபுணத்துவம், நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை
உள்ள அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றனர்.

பொருளாதாரம், நிலைத்தன்மை மற்றும் கட்டொழுங்கில் நாடு முன்பு
கண்டிருந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு ஏதுவாக தனது
தலைமைத்துவத்தில் மாறுதல்கள் தேவைப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தூய்மை, திறமை மற்றும் நம்பிக்கை ஆகிய மதிப்புக்கூறுகளை
கலாசாரமாக்கிக் கொள்ளும்படி இன்னும் பணியில் இருக்கும் அனைத்து
நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசத் தந்திரிகளை நான் கேட்டுக்
கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

நடப்பு அரசாங்கம் அமல்படுத்தும் கலாசாரத்திற்கேற்பத் தங்களின்
அணுமுறைகளை மாற்றிக் கொள்ளும் அரசாங்க ஊழியர்களே இந்த
அரசாங்கத்திற்கு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரச தந்திரிகள் கலந்து கொண்ட விருந்து
நிகழ்வுக்கு வழங்கிய உரையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவரது
உரையை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசுப் வாசித்தார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் பணிகள் மீதான இலக்கு
மற்றும் கடப்பாட்டை அரசு ஊழியர்கள் மாற்றிக் கொள்ளும்
அதேவேளையில் விதிமுறைகளைச் சரிபார்க்காமல் உத்தரவுகளைப்
பின்பற்றும் போக்கையும் கைவிட வேண்டும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :