HEALTH

மாதவிடாய் பிரச்சனையைச் சமாளிக்கச் சுகாதார அமைச்சு நாளை முதல் இலவசச் சானிட்டரி நாப்கின்களை வழங்கத் தொடங்குகிறது

புத்ராஜெயா, டிச.12: நாட்டில் நிலவும் மாதவிடாய் பிரச்சனையைச் சமாளிக்கச் சுகாதார அமைச்சு (MOH) இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்க உள்ளது. ஆரம்பமாக இத்திட்டம் சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் தொடங்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா கூறினார்.

2022 பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதைத் தொடர முன் மொழிவீர்களா என்று கேட்டதற்கு, 2023 பட்ஜெட்டில் இந்த விஷயத்தை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

முன்னதாகச் சமர்ப்பிக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தில் B40 சேர்ந்த 130,000 இளம் பெண்களுக்கு அடிப்படை சுகாதார கருவிகளை அரசாங்கம் வழங்கியது.  இத்திட்டம் மலேசியாவில் மாதவிடாய் பிரச்சனையின் மீது அரசாங்கத்தின் அக்கறையின் அடையாளமாக உள்ளது.

சிலாங்கூர் அரசாங்கம், 2023 வரவு செலவுத் திட்டத்தில் பெண்களுக்கு RM200,000யை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் அடங்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது.


Pengarang :