SELANGOR

தீம் பார்க் சம்பவத்தை மாநில அரசிடம் விட்டுவிடுங்கள் – டத்தோ மந்திரி புசார்

ஷா ஆலம், டிச.14: புன்சாக் ஆலத்தில் உள்ள தீம் பார்க்கில் 3 பேர் காயம் அடைந்த சம்பவத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து விசாரணை நடத்தி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்தச் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து உள்ளூர் அதிகாரிகளாலும் (PBT) அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“அறிக்கை மற்றும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பாதிக்கப் பட்டவர்களுக்குக் காயங்கள் ஏற்படுத்தியுள்ளது,“ என்றார்.

“இந்தச் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். எனவே, ஒப்புதல் அளிப்பதற்கு முன் பிபிதி (PBT), தரநிலைகளை நன்றாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறினார்.

கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சிலின் (MPKS) அனுமதியின்றி தீம் பார்க் இயங்கியதாக உள்ளாட்சி எஸ்கோ இங் ஸீ ஹான்  (Ng Sze Han) தெரிவித்தார். அமலாக்க நடவடிக்கை எம்.பி.கே.எஸ் மூலம் அபராதம் விதித்தல் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நேற்று இரவு நடந்த சம்பவத்தில், புன்சாக் ஆலம், ஈக்கோ கிராண்டியூரில் தீம் பார்க் விளையாட்டிலிருந்து தவறி விழுந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.


Pengarang :