SELANGOR

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி – சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (அனிஸ்)

ஷா ஆலம், டிச 15: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (AnIS) மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) உதவி செய்ய எப்போதும் தயாராக உள்ளது, மேலும் மக்களின் தேவைக்கு ஏற்ப சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது.

இத்திட்டம் குறிப்பாக மாநிலத்தில் உள்ள பின் தங்கியவர்களுக்காக எனப் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டின் எஸ்கோ  டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.

“அனிஸ் சிறப்பு உதவித் திட்டம் என்பது இத்துறையின் திட்டங்களில். ஒன்றாகும். இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் சிலாங்கூர் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது.

“2023 பட்ஜெட்டில், அனிஸ் RM4 மில்லியனைப் பெற்றது மற்றும் அனிஸ் சிறப்பு உதவித் திட்டமானது சிலாங்கூரில் சிறப்புக் குழந்தைகளை மேம்படுத்துவதற்காக RM1 மில்லியன் சிறப்பு ஒதுக்கீட்டைப் பெற்றது,” என்று அவர் கூறினார்.

சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் நடைபெற்ற அனிஸ்  சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் 41 பேர் உதவி பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்திட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்குச் சான்றாக, சிலாங்கூர் சிறப்பு மக்கள் அறக்கட்டளை, சிலாங்கூர் மந்திரி புசார் (ஒருங்கிணைத்தல்) கீழ் ஒரு சிறப்பு துணை நிறுவனத்தையும் நிறுவும் என்று சித்தி மரியா கூறினார்.

“எதிர்காலத்தில், தேவைப்படும் ஊனமுற்றோருக்கு குறிப்பாகப் பின்தங்கியவர்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்க முடியும் என நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :