மத்திய மியன்மாரில் நில நடுக்கம்- கட்டிடங்கள் சேதம்

யாங்கூன், டிச 15- ரிக்டர் அளவில் 5.2 எனப் பதிவான நில நடுக்கம் மத்திய
மியன்மாரில் இன்று அதிகாலை ஏற்பட்டது. மத்திய மியன்மாரின்
மண்டாலாய் பிரதேசத்தின் தடா-யு பகுதியின் கிழக்கே 6.43 கிலோ மீட்டர்
தொலைவில் இன்று அதிகாலை 3.16 மணிக்கு இந்த நில நடுக்கம்
ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மற்றும் நீரியல் துறை கூறியது.

இந்த நில நடுக்கம் 21.81 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 96.03 டிகிரி
கிழக்கு தீர்க்க ரேகையில் 63 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்தது.
நாட்டின் மாண்டாலாய் மற்றும் சகாயிங் மாநிலங்களில் இந்த நில
நடுக்கம் உணரப்பட்டது. இது தவிர, தலைநகர் மாண்டாலேயில் சில
கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிருடச் சேதம் ஏற்பட்டது தொடர்பில்
எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மாண்டாலாய் பிரதேசத்தின்
தீயணைப்புத் சேவைத் துறை அதிகாரி சின்ஹூவா செய்தி நிறுவனத்திடம்
கூறினார்.


Pengarang :