ALAM SEKITAR & CUACA

இன்று மாலை நேரங்களில் பல மாநிலங்களில் மழை பெய்யும்

ஷா ஆலம், டிச.17: இன்று முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பருவமழை தொடர்ந்து கிழக்குக் கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

பிற்பகலில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

“மாலையில், பேராக் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தேசியப் பேரிடர் மேலாண்மை (நட்மா) முகநூலின் மூலம் தெரிவித்தது.

இதற்கிடையில், இன்று காலை மணி 7 நிலவரப்படி, பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் திறக்கப்பட்ட 15 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) 2,097 பேர் இன்னும் தங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மாறவில்லை.

திராங்கானு, பகாங், ஜோகூர், பேராக் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.


Pengarang :