ACTIVITIES AND ADSECONOMY

நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது

பத்தாங் காலி, டிச 19- இங்குள்ள கோத்தோங் ஜெயா, ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை  ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது.

நான்காவது நாளாக இன்று மேற்கொள்ளப்படும் தேடி மீட்கும் நடவடிக்கையில் ஏ பிரிவு (ஹில்வியூ மற்றும் சி பிரிவு (ரிவர்வியூ) ஆகியவற்றோடு இன்னும் தோண்டப் படாத பகுதிகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் கூறினார்.

வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கே 9 மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் நேற்று இரவு 9.39 மணிக்கு நிறுத்தப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் மொத்தம் 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 24 பேர் உயிரிழந்த வேளையில்  61 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.


Pengarang :