ALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம் காரணமாகத் திரங்கானுவில் 62 சாலைகள் மூடப்பட்டன

ஷா ஆலம், டிச 20- ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் திரங்கானு மாநிலத்திலுள்ள 62 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

பெசுட் மாவட்டம் வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கிளந்தான்
மற்றும் கோல திரங்கானுவுடனான தொடர்பை இந்த மாவட்டம்
முழுமையாக இழந்துள்ளதாக பெரித்தா ஹரியான் செய்தி
வெளியிட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி 0.35 மீட்டர் முதல் 700 மீட்டர் வரை வெள்ளம்
ஏற்பட்ட காரணத்தால் உலு திரங்கானு மாவட்டத்தில் 11 சாலைகள்
மூடப்பட்டதாகப் பொதுப் பணித்துறை கூறியது.

இதனிடையே டுங்குன் மாவட்டத்திலுள்ளச் சில சாலைகள் 0.80 மீட்டர்
முதல் 1.0 மீட்டர் வரை வெள்ளத்தில் மூழ்கியதால் அச்சாலைகளில்
போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவமழையின் சீற்றத்தால் கிளந்தான், திரங்கானு, பகாங்,
பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 63,415 பேர் துயர்
துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டதாகச் சிலாங்கூர் கினி முன்னதாகச்
செய்தி வெளியிட்டிருந்தது.

திரங்கானுவில் மிக அதிகமாக அதாவது 10,211 குடும்பங்களைச் சேர்ந்த
37,021 பேர் 309 துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.


Pengarang :