ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது

ஷா ஆலம், டிச 20: திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 38,806 ஆக உயர்ந்துள்ளது. 10,629 குடும்பங்களைச் சேர்ந்த அவர்களுக்காக மதியம் 12 மணி நிலவரப்படி 318 தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளன.

தேசியப் பேரிடர் மேலாண்மை துறையின் கூற்றுப்படி, கிளந்தான், பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது, பகாங்கில் சிறிது குறைந்துள்ளது.

கிளந்தனில், 6,897 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 25,353 பேர் இன்னும் 133 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், ஜோகூரில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் மூன்று மையங்களிலும் பேராக்கில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் இரண்டு மையங்களிலும் தங்கியுள்ளனர்.

இருப்பினும், பகாங்கில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆகக் குறைந்துள்ளது. 214 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் இப்போது எட்டு தற்காலிகத் தங்கும் மையங்களில் உள்ளனர்.


Pengarang :