ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானு, கிளந்தான் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 65,000க்கும் அதிகமானோர் 596 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்

ஷா ஆலம், டிச 21: வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 65,621 ஆக அதிகரித்துள்ளது.

இரு மாநிலங்களிலும் மொத்தம் 596 தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தகவல் தெரிவித்துள்ளது.

கிளந்தானில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,460 குடும்பங்களைச் சேர்ந்த 26,513 பேர் 135 தற்காலிகத் தங்கும் மையங்களில் உள்ளனர்.

திரங்கானுவில் 10,725 குடும்பங்களைச் சேர்ந்த 39,108 பேர் 462 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும் பகாங் (873), பேராக் (54) மற்றும் ஜோகூர் (53) ஆகிய மூன்று மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.


Pengarang :