NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதி

கோலாலம்பூர், டிச.21: பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்றவர்களின் நிலை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில், செலாயாங் மருத்துவமனை, கோல குபு பாரு மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 13 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை குறித்த எந்தவொரு தகவலும் பொறுப்பான நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக பெற்ற பிறகு அவ்வப்போது தெரிவிக்கப்படும்” என்று அறிக்கை கூறுகிறது.

சிகிச்சை பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1. யாம் லீ யென், பெண் (41), செலாயாங் மருத்துவமனை, டிசம்பர் 17

2. என்ஜி வெய் லூன், ஆண் (13), கோலா குபு பாரு மருத்துவமனை,

     டிசம்பர் 16

3. மங் தான், ஆண் (34), குவலா குபு பாரு மருத்துவமனை, டிசம்பர் 16

4. சாண்டி செ உய் கென், பெண் (32), குவலா குபு பாரு மருத்துவமனை,

     டிசம்பர் 16

5. தான் இ இன், பெண் (43), செலாயாங் மருத்துவமனை, டிசம்பர் 19

6. சூ வை லூன், ஆண் (34), செலாயாங் மருத்துவமனை, டிசம்பர் 17

7. லிங் சி சுவான், ஆண் (19), கோலாலம்பூர் மருத்துவமனை, டிசம்பர் 19

8. லோ தெங் சுய், ஆண் (44), செலாயாங் மருத்துவமனை, டிசம்பர் 18

 

– பெர்னாமா


Pengarang :