ALAM SEKITAR & CUACANATIONAL

ஆறு மாநிலங்களில் 24 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படலாம்

கோலாலம்பூர், டிச 22 : இடியுடன் கூடிய கனமழை பெய்தால் ஜோகூர், பகாங், பேராக், சிலாங்கூர், திரங்கானு மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் 24 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் (PRABN) மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், ஜோகூரில் உள்ள கோத்தா திங்கி, செடிலி கெச்சில், உலு சுங்கை செடிலி பெசார், மூவார் மற்றும் மெர்சிங் ஆகிய இடங்கள் இவ்வானிலையை எதிர்நோக்க கூடும்

பகாங்கில், பண்டார் குவாந்தன், உலு குவாந்தன், கோலா குவாந்தன், புலாவ் மானிஸ், சுங்கை கரங், மாரான் மற்றும் பெக்கான் ஆகிய இடங்கள் அதில் அடங்கும்.

இதற்கிடையில், பேராக்கில் பாகன் டத்தோக் மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிலாங்கூரைச் சேர்ந்த கிள்ளானும் அதில் அடங்கும்

திரங்கானுவில் மாராங் மற்றும் கோலா திரங்கானுவும் சபாவில் துவாரனும் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க, தயார் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“அதிகாரிகள் அல்லது வெள்ளப் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும் தகவலுக்கு அவ்வப்போது https://publicinfobanjir.water.gov.my அல்லது Facebook @PublicInfoBanjir மற்றும் Twitter @JPS_InfoBanjir என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :